Asoka Mitran



அசோகமித்திரன் (செப்டம்பர் 22, 1931-மார்ச்சு 23,2017) தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் 1931 ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் உள்ள செகந்திராபாத் நகரத்தில் பிறந்தவர். தந்தையின் மறைவிற்கு பிறகு தனது 21ஆம் வயதில் சென்னைக்கு குடியேறினார்  . எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது இவருடைய எழுத்து. தமிழ் இலக்கியத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவை இவரது கதைகள்.  அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை இவருக்குரியது. இவரது நாவல்கள் ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆங்கில நாளிதழ்களில் தொடர்ந்து எழுதிவந்த அசோகமித்திரன், ஐக்கிய அமெரிக்காவில் அயோவா பல்கலைக்கழகத்தில் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்து கொண்டவர்.

1996 இல் அப்பாவின் சிநேகிதர் சிறுகதை தொகுப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் சென்னை அல்லது ஐதராபாத்தை கதைக்களமாக கொண்டு அமைந்திருக்கும். சாதாரணமான கதாபாத்திரங்களின் மூலம் அசாதாரண கருத்துக்களை வெளிப்படுத்துவதாக இவரது படைப்புகள் அமைந்திருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.இவர் 2017 மார்ச்சு 23 அன்று சென்னை வேளச்சேரியில் உள்ள தன் மகன் வீட்டில் 86 ஆம் அகவையில் இறந்தார்.



ஆக்கங்கள்
சிறுகதைகள்
அப்பாவின் சிநேகிதர்
உண்மை வேட்கை
காலமும் ஐந்து குழந்தைகளும்
தந்தைக்காக
நாடகத்தின் முடிவு
பிப்லப் சௌதுரியின் கடன்
முறைப்பெண்
வாழ்விலே ஒருமுறை
விமோசனம்
நாவல்கள்
ஆகாசத்தாமரை
இன்று; செப்டம்பர் 1984; நர்மதா பதிப்பகம், சென்னை.
ஒற்றன்
கரைந்த நிழல்கள்
தண்ணீர்
பதினெட்டாவது அட்சக்கோடு
மானசரோவர்
குறுநாவல்கள்
இருவர்
விடுதலை
தீபம்
விழா மாலைப் போதில்
பிற
அசோகமித்திரன் கதைகள் தொகுப்பு 1&2

கட்டுரைகள்
அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump

Publised under a Creative Commons Attribution 4.0 International license.